Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (12:26 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா  அதிக பட்சமாக 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை உறுதி செய்தார். 
இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments