Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூத் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (12:41 IST)
யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ளார்.
 
3-வது யூத் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.2 புள்ளிகள் குவித்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை  பெற்றுத் தந்தார். தென்கொரிய வீரர் சங் யன்ஹோ 236.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், ஸ்விட்சர்லாந்து வீரர் சொலாரி ஜேசன் 216.6 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments