Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து விளையாட்டில் 'ஹீரோ' ஒருவர் தேவை - நடிகர் ஜான் அப்ரஹாம்

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2014 (17:54 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் அப்ரஹாம் கால்பந்து விளையாட்டில் 'ஹீரோ' ஒருவர் தேவையென கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜான் அப்ரஹாம், விரைவில் துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க ஆவலாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மோகம், பிற விளையாட்டுகளுக்கு இல்லாத நிலையில், கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படத்தில் நடித்து வரும் ஜான், ஐபிஎல் போன்று கால்பந்து விளையாட்டுக்காக நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீகில் கௌஹாத்தி அணியை வாங்கியுள்ளார்.
 
சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டு பிரியரான ஜான், 'கால்பந்து விளையாட்டில் 'ஹீரோ' ஒருவர் தேவையென கூறியுள்ளார். 
 
'இந்தியாவில் ஒரு விளையாட்டின் 'ஹீரோ', அந்த விளையாட்டை மக்களிடம் விரைவாகவும், சுலபமாகவும் கொண்டுசேர்க்க முடியும். எப்படி டென்னிஸ் விளையாட்டிற்கு ஒரு சானியா மிர்சா, பாட்மின்டனுக்கு ஒரு சாய்னா  நேஹ்வாலோ, அதே போல கால்பந்துக்கு இந்தியாவில் ஒரு ஹீரோ தேவை எனக் கூறியுள்ளார்.  
 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்காக கேரள அணியை சச்சின் டெண்டுல்கரும், கொல்கத்தா அணியை கங்குலியும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments