Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய சைக்கிள் வீராங்கனை டெபோரா சாதனை

இந்திய சைக்கிள் வீராங்கனை டெபோரா சாதனை
, வியாழன், 8 அக்டோபர் 2015 (13:21 IST)
தைவான் கோப்பை சைக்கிள் போட்டியில் தங்கம் வென்று இந்திய சைக்கிள் வீராங்கனை டெபோரா சாதனைப் படைத்ததன் மூலம் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.


 

 
20 வயதான டெபோரா, மகளிர் எலைட் பிரிவில் ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த இருப்பது தற்போது இந்தியா விளையாட்டு துறையில் சாதணை படைத்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
 
 மகளிர் எலைட் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனையை தோற்கடித்த அவர், முதல் தங்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய சைக்கிள் வீராங்களை ஆவார். கெய்ரின் பிரிவில் டெபோரா, மற்றொரு தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
 
இந்நிலையில் பாங்காக்கில் அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள யுசிஐ போட்டி, தில்லியில் வரும் நவம்பர் 18-20 ஆம் தேதி  வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டி ஆகியவற்றிலும் டெபோரா பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil