நேற்றைய வெற்றியால் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (12:29 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
312 ரன்கள் என்ற இலக்கை 49.4 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் நேற்று பாகிஸ்தான் அணியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்று இந்திய அணியின் புதிய சாதனை செய்துள்ளது. அதாவது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இந்திய அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 11 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றதே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது இந்திய கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments