Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியாவால் தடுக்க முடியுமா?

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (16:44 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் தற்போது அந்த அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இனிவரும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் வென்றால் 11 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துவிடும்.
 
ஆனால் அதனால் மட்டும் அந்த அணி அரையிறுதிக்கு சென்றுவிட முடியாது. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியை விட அதிக புள்ளிகளோ அல்லது 11 புள்ளிகளுடன் அதிக ரன்ரெட்டோ பெற்று பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிடு அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்
 
இந்த நிலையில் இந்தியா தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வதை இந்தியாவால் தடுக்க முடியும் என்றும், இந்தியா இதனை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும்,  பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்கவே முயற்சிக்கும் என்றும் பாசித் அலி, இந்திய அணி மீது வீண்பழி சுமத்துவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments