Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டியில் திடீர் மாற்றம்

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (22:30 IST)
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரிப்பாக ஆடி வருவதால் இந்த போட்டி டிராவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.


 


இந்த நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. பகலிரவு போட்டியான இந்த இரு போட்டிகளும் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த் நிலையில் தற்போது இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது 11.30க்கு போட்டி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் வட மாநிலங்களில் கடும்பனி நிலவும் என்பதால் தர்மசாலா மற்றும் மொஹாலி ஆகிய இரு இடங்களில் நடைபெறும் போட்டிகள் இரண்டு மணி நேரம் முன்னதாக தொடங்கும் என்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments