Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மளமளவென விழும் வங்கதேச விக்கெட்டுக்கள்.. ஆனாலும் டிராவை நோக்கி செல்லும் போட்டி..!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:32 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் மளமளவென மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து, வங்கதேச அணி சற்றுமுன் 62 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்துள்ளது.
 
ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் தலா இரண்டு விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
 
முன்னதாக போட்டி தொடங்கிய முதல் நாளில் வங்கதேச அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளிலும் மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
 
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி இன்னும் முதல் இன்னிங்க்ஸை முடிக்கவில்லை. இதனால், இந்த போட்டி ‘டிரா’வுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடுவிதித்த பிசிசிஐ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு.! நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு..!!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது நியூசிலாந்து..!

கான்பூர் மைதானத்தில் இன்று மழை.. ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி..!

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments