Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவலையுடன் பிட்சை பார்த்த தல தோனி! ஆடுகள பரமரிப்பாளர் உருக்கம்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (06:01 IST)
கிரிக்கெட் தல என்று அன்பாக அழைக்கப்பட்டு வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாள் முழுவதும் இருப்பதாக ராஞ்சி ஆடுகள பரமரிப்பாளர் எஸ்.பி.சிங் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 


புனே, பெங்களூர் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வரும் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தல தோனி கடந்த சில நாட்களாக ராஞ்சி மைதானத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றாராம்

தனது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்ற வருத்தம் அவரது மனதில் இருந்தாலும் இந்த 'பிட்'ச்சில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர் விரும்புகின்றாராம். அவ்வப்போது தோனியின் வருகையை கவனித்து வரும்  ராஞ்சி ஆடுகள பரமரிப்பாளர் எஸ்.பி.சிங் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

’ எப்போதும் போல கேப்டன் தோனி, மைதானத்துக்கு பயிற்சி செய்ய வந்தார். எனக்கு தெரிந்து அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் நேரத்தை விட இந்த ராஞ்சி மைதானத்தில் தான் அதிக நேரம் செலவிடுவார். ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் என்னிடம் ஒரு முறை கூட அணிக்கு ஏற்ப ஆடுகளத்தை தயாரிக்க சொன்னதே கிடையாது. ஆனால் இன்று அவர் வந்தது முதல் ஆடுகளத்தை உற்று நோக்கிய படியே இருந்தார். அவரின் பார்வையே ஆயிரம் அர்த்தம் சொல்லியது. அவருக்கு தனது சொந்த மண்ணில் முதல் முறையாக நடக்கும் டெஸ்ட் போட்டியில் நடக்கும் டெஸ்டில் பங்கேற்க முடியவில்லை என்ற கவலை உள்ளது. ஆனால் அதை விட அடுத்த டெஸ்டில் இந்திய அணி, ஆஸி.,யை அடித்து ஓட விட வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் அதிகம் உள்ளது, அது அவரது பேச்சில் இருந்தே தெரிந்தது' என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments