Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவான் சொதப்பல்; இந்திய அணிக்கு சிறந்த தொடக்க வீரர் தேவை: கங்குலி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (17:21 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரரான தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் டி20 தொடரை தவிர மற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வி அடைந்தது. 
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தொடக்க வீரர்களின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்காக அவருக்கு தனது பாராட்டை தெரிவித்தார் கங்குலி. ஆனால் தவான் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
 
தவான் தொடக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததை அடுத்து அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கங்குலி கூறியதாவது:-
 
நான் யாரையும் தனியாக குறிப்பிடவில்லை. ஆனால் தொடக்க வீரர் கண்டிப்பாக ரன்கள் குவிக்க வேண்டும். புது பந்தை பழையதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களும் அது உதவியாக இருக்கும்.
 
வெளிநாடுகளில் விளையாட இந்திய அணி கண்டிப்பாக ஒரு தொடக்க வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்திய மண்ணில் காணும் வெற்றியை விட அயல் நாடுகளில் காணும் வெற்றியே சிறப்பான ஆட்டத்துக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் ராகுலுக்கு தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments