Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித், கோலி அதிரடியில் கதிகலங்கிய இலங்கை

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (18:10 IST)
நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது, முதல் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காவது போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் சேர்ந்து இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய விராட் கோலி 96 பந்துகளில் 131 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
அதைத்தொடர்ந்து பாண்டியா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். பாண்டியா ஒருபக்கம் வழக்கமாக அவரது ஸ்டைலில் ஆட மறுமுனையில் ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார். ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் வெளியேற, அடுத்த பந்தில் ரோகித் சர்மாவும் வெளியேறினார்.
 
அதன்பிறகு வந்த ராகுல் 7 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தோனி மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் இணைந்து விளையாட தொடங்கினர். நிதானமாக ஆடி கடைசியில் வெளுத்து வாங்கினர். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே 42 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். தோனி 42 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments