Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மாவை அடுத்து ஜடேஜாவும் சதம்.. முதல் நாள் முடிவில் ஸ்கோர் விபரம்

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி அதன்பின் அபாரமாக விளையாடி உள்ளது. 
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 33  ரன்கள் என்று திணறிக் கொண்டிருந்த நிலையில் அதன் பின் சுதாரித்து விளையாடியது. 
 
றிப்பாக கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக சதம் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து ஜடேஜாவும் சதம் அடித்தார் அபாரமாக விளையாடிய சர்ப்ராஸ் கான்  62 ரன்கள் அடித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்துள்ளது 
 
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களையும் டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய இரண்டாம் நாளில் இந்திய அணி 500 ரன்கள் எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments