மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்த சாதனையை படைத்துள்ள இந்திய அணி!!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:42 IST)
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


 
 
ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு 3 வது இடத்தில் இருந்த இந்திய அணி, 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் 120 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
 
ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி ஆறாவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 
 
முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து 1995 மார்ச் வரை 4 மாதம் முதல் இடத்தில் இருந்தது.
 
அதை தொடர்ந்து 1995 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும், 2013 ஜனவரி முதல் 2014 ஜனவரி வரையும், 2014 செப்டம்பரில் முதல் இடத்தில் இருந்தது.
 
தற்போது மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments