Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..!

Siva
வெள்ளி, 28 ஜூன் 2024 (07:21 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய பவுலர்களின் அசத்தலான விளையாட்டு காரணமாக இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும் சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர்.

 இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடிய நிலையில் இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டினர். இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த, பும்ரா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் காரணமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை தென்னாபிரிக்க அணியுடன் இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் அந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments