Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் இவை தான்..!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (08:00 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

 இதனை அடுத்து இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளும் ,பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் அரையிறுதியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று நடந்த இரண்டு லீக் போட்டிகளில் இலங்கை அணி தாய்லாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதும் அதேபோல் வங்கதேச அணி மலேசிய அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை 2 அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments