Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (07:57 IST)
பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்
 
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடதக்கது 
 
இந்திய பவுலர்கள் ஆன ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், சிராஜ் மற்றும் பும்ரா ஆகிய அனைவரும் விக்கெட்டுக்களை எடுத்தனர் என்பதும் குறிப்பாக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது 69 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது. கேப்டன் ரஹானே தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாக கூறப்படுவதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!

தென்னிந்திய அளவிலான ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்! - 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு!

விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திட்டம் இதுதான்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

பாகிஸ்தான் வருவதில் இந்திய அணிக்கு என்ன பிரச்சனை?... கிரிக்கெட் வாரியத் தலைவர் கேள்வி!

ஷமி அடுத்த விமானத்திலேயே ஆஸ்திரேலியா செல்லவேண்டும்… கங்குலி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments