Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (07:45 IST)
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து தொடரையும் இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது 
 
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி நேற்றைய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மலன் 91 ரன்களும் குவிண்டன் டீகாக் 78 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குவின்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி அதாவது நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments