Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (07:42 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக போராடியும், இன்னொரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால் இந்தியா தோல்வி அடைந்தது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்தது. அதேபோல், இந்தியாவும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கியது. 
 
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் ஏமாற்றிய போதிலும், ரவீந்திர ஜடேஜா கடைசிவரை வெற்றிக்காக போராடினார். அவர் 61 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இன்னொரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால்,  இந்தியா 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments