Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டி.. இந்தியாவுக்கு 19வது தங்கம்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (10:24 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றுள்ளது,

சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதனால் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த பதக்கத்தையும் சேர்த்து நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்கு 82வது பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்றைய 11-வது நாளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல் இந்திய வீரரான கிஷோர் குமார் ஜெனா இதே பிரிவில் வெள்ளி வென்ற நிலையில் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய  அணி  தங்கம் வென்றது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில்  நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை பெற்ற நிலையில் இன்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இன்று பெற்ற தங்கத்தையும் சேர்த்து இந்தியா மொத்தம் 82 பதக்கங்களை பெற்றுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments