Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, வங்கதேசம், இலங்கை! முத்தரப்பு கிரிக்கெட் போட்டி எப்போது?

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (05:53 IST)
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடங்கவுள்ளது. இந்நிலையில்  அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகள் மோதும் ‘நிதாஹாஸ் டிராபி’  முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதாகவும், இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 


இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் முடிவடைவதை அடுத்து இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் கலந்து கொள்ள வேண்டும் என்றும்  இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் அட்டவணை வெகுவிரைவில் வெளியாகும் என்றும் இந்த போட்டியில் இரண்டு இறுதிப்போட்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments