Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கும் இம்ரான் தாஹிர்: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (07:35 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 
 
கடந்த போட்டியில் தோனி செய்த சில அதிரடி மாற்றங்களால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த எட்டு போட்டிகளாக அணியில் இருந்தும் விளையாடாமல் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் விரைவில் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்த போது இம்ரான் தாஹிர் விரைவில் அணிக்காக விளையாடுவார் என்று கூறினார்
 
வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற நிலை இருப்பதால் இந்த சிக்கல் உள்ளது. இப்போதைக்கு வாட்சன், டூபிளஸ்சிஸ், சாம் கர்ரன் ஆகிய மூவரையும் அணியில் இருந்து தூக்க முடியாது. அதே நேரத்தில்  பிராவோவும் கடந்த போட்டியில் அருமையாக பந்து வீசியதோடு ஒரு ரன் அவுட்டும் செய்தார். பேட்டிங்கில் அவர் முதல் பந்தில் அவுட் ஆனாலும் அவரது பேட்டிங் நிச்சயம் எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தக் கூடியதுதான்
 
எனவே நான்கு வெளிநாட்டு போட்டியாளர்களும் நல்ல முறையில் விளையாடி கொண்டிருப்பதால் புதிய வெளிநாட்டு போட்டியாளரை சேர்க்க முடியாத நிலை உள்ளது இருப்பினும் பிராவோவுக்கு பதில் ஏதாவது ஒரு போட்டியில் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments