Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்கள் – ஐசிசி ஒப்புதல் அளிக்குமா ?

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (15:20 IST)
கால மாற்றத்திற்கேற்ப டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்களைக் கொண்டுவர எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றி சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் எம்.சி.சி அமைப்பின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதன் படி ‘ஒரு ஓவர் முடிந்ததும் ஓவர் முடிந்ததும் 45 வினாடியிலிருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், புதிய ஓவரை வீச வரும் வீச்சாளருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். இதற்காக ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கடிகாரம் வைக்கப்படும். இதில் தாமதப்படுத்தினால் எதிர் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதுபோல ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இனி ப்ரீ ஹிட் அறிமுகப்படுத்தப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இனி  ஒரே மாதிரியாகத் தரமான பந்துகளை பயன்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விதிகளாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments