ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை: ஐசிசி அறிவிப்பு..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (11:30 IST)
ஆணாக இருந்த ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிறகு அவர் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதி இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையில் ஆணுக்குரிய தன்மை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் அவர் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்றும்  பெண்கள் அணியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த விதி சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உள்ளூர் போட்டிகளுக்கு அந்தந்த நாடுகளின் பாலின வரைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும் நேர்மையையும் வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசியின் இந்த விதிகள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments