யார் சிறந்தவர் சச்சினா ? கோலியா ? – முன்னாள் வீரர் கருத்து !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (08:26 IST)
இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சச்சின் மற்றும் கோலி இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு இயன் சேப்பல் பதிலளித்துள்ளார்.

வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய பேட்டிங்கில் கோலோச்சிய சச்சின், கங்குலி மற்றும் கோலி, ரோஹித் ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான இயான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ சச்சினும், கங்குலியும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த போது மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டனர். அவர்கள் காலத்தில் ஒவ்வொரு அணியும் தலை சிறந்த இரு பவுலர்களைக் கொண்டிருந்தது. அதுபோல தரமான பவுலர்களை ரோஹித்தும், கோலியும் சந்தித்து இருப்பார்களா?. ஒருவரின் எதிராளியை வைத்தே அவரை மதிப்பிடலாம். அதை வைத்து மதிப்பிடும் போது சச்சின் கங்குலி இருவரும் யார் யாரை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதே அவர்கள் யார் என்பதற்கு சான்று. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கோலி சிறந்த பேட்ஸ்மேன் தான் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments