Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக ஹாக்கி லீக் தொடர்: சத்தீஸ்கரில் இன்று ஆரம்பம்

உலக ஹாக்கி லீக் தொடர்: சத்தீஸ்கரில் இன்று ஆரம்பம்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (17:05 IST)
உலக ஹாக்கி லீக் தொடர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடுகிறது.


 
 
சர்தார் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, அன்மையில் நடைபெற்ற நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான தொடரில் சிறப்பாக விளையாடியது. இதனால் சர்வதேச தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்திலிருந்து, ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. இதனால் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றும் என்று Roelant oltmans நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இன்று 6 மணிக்கு இந்திய-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ராய்ப்பூரில் தொடங்குகிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் ஜெர்மனி அணி, நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil