Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் விக்கெட்டை இரு இன்னிங்ஸிலும் எடுக்க வேண்டும் – ஆஸி பவுலர் ஆசை!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (07:09 IST)
கோலியின் விக்கெட்டை முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எடுக்க வேண்டும் என ஆஸியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களை விளையாடி முடித்துள்ளது. அதில் ஒரு நாள் தொடரை இழந்தாலும்  டி 20 தொடரை வென்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங் பந்தில் நடக்க உள்ளது.
இந்த போட்டியில் மட்டுமே இந்திய அணியின் கேப்டன் கோலி விளையாட உள்ளார். அதன் பிறகு தனது மனைவியின் பிரசவத்தின் போது கூட இருப்பதற்காக அவர் இந்தியா திரும்புகிறார். இந்நிலையில் ஆஸி யின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டில் அவர் கோலியின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments