Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:23 IST)
இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை கேலி செய்யும் விதமாக ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சிக்ஸ்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீரர்களின் ஓய்வறைப் பற்றி சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட அவர் இப்போது முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக இப்போது ஓய்வில் உள்ளார்,

இந்நிலையில் சமீபத்தில்  ஜாகீர் கானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும்விதமாக வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் ’இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக், நான் இங்கு  மைதானத்துக்கு வெளியே அடிப்பது போல் நீங்களும் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் குறிப்பிட்டுவிட்டு ‘ஜாகீர் கான் பந்தில் தான் சிக்ஸ் அடிக்கும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.  தான் யாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறோமோ அவர்களையே மட்டம்தட்டி வெறுப்பேற்றுவது போல அந்த வீடியோ உள்ளதாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

அடுத்த கட்டுரையில்
Show comments