Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (07:49 IST)
கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!
மெக்சிகோ நாட்டில் நட்பு ரீதியாக இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மெக்சிகோ நாட்டில் நேற்று நடைபெற்ற இருதரப்பு இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் திடீரென வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியதை எடுத்து அதில் உள்ள ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எதிரணி வீரர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியல் சுட்டார்.
 
இந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் மற்றும் அவரது குழுவினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments