Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா மூன்று பேரிடம் பாடம் கற்றிருக்கிறார்… குஜராத் அணி இயக்குனர் பதில்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:26 IST)
புதிதாக உருவாகியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பல போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள மெகா ஏலத்துக்காக அவரைக் கழட்டிவிட்டது மும்பை.

இதனால் அவர் இப்போது புதிய அணியான அகமதாபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனரான விக்ரம் சோலங்கி தங்கள் அணியின் கேப்டன் குறித்து பேசியுள்ளார். அதில் ‘ஹர்திக் பாண்ட்யாவுக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவதற்குரிய எல்லா தகுதிகளும் உள்ளது. அவர் விராட் கோலி, தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூன்று கேப்டன்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருப்பார். அவருக்கு அணி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தரும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments