Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை மிஸ் செய்யும் மேக்ஸ்வெல்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:13 IST)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இப்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல்லுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது இந்தியாவின் ஐபிஎல். முதலில் மும்பைக்கும், பின்னர் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் இப்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக அவர் இருந்தார்.

இந்த ஆண்டும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது. ஏனென்றால் மார்ச் மாதம் அவருக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணம் முடிந்து அவர் பயோபபுளில் இணைந்து பின்னர் மீண்டும் அணிக்குள் இணையவேண்டும் என்பதால் அவர் சில போட்டிகளில் இருக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments