Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்ணனையில் கவாஸ்கர் மற்றும் நாசர் ஹுசைன் இடையே காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கும் நாசர் ஹுசைனுக்கும் இடையே வர்ணனையில் காரசாரமான விவாதம் நடந்தது.

நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் இரு அணி வீரர்கள் சரிக்கு சமமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி பத்தி ஒன்றில் எழுதிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தற்போது இருக்கும் இந்திய அணி முந்தைய இந்திய அணி போல இல்லை. முந்தைய இந்திய அணிகள் எதிரணி வீரர்களிடம் களத்திலும் பேச்சிலும் எளிதில் மடிந்து விடுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் அணி இரண்டு மடங்காக அதை திருப்பிக் கொடுக்கிறது என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி வர்ணனையின் போது பேசிய சுனில் கவாஸ்கர் ‘எந்த இந்திய அணியை நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் ஒருபோதும் எளிதில் மடிந்துவிடுவதில்லை. கடுமையாக போராடுவோம். வெற்றியும் பெற்றிருக்கிறோம். தோல்வியும் அடைந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் சொன்னது என்னை காயப்படுத்தி விட்டது.’ என்று கூறி இந்தியா இங்கிலாந்து தொடர்களின் புள்ளி விவரங்களை அடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மைக் ஆர்த்தர் இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments