Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வாருங்கள்.. மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் – கம்பீர் vs அஃப்ரிடி !

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (13:15 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ஃப்ரிடிக்கும் இடையில் சமூகவலைதளங்களில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

அப்ரிடி தனது வாழ்க்கை வரலாற்றை ’கேம் சேஞ்சர்’ எனும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தனது வயது குறித்த பல சர்ச்சையான விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில் ஒரு அத்தியாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீருக்கும் அவருக்கும் இடையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த மோதல் குறித்துப் பேசியுள்ளார். அது இப்ப்போது மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது.

தனது புத்தகத்தில் ‘ விளையாட்டின் போது  நடக்கும் மோதல்களில் சில தொழில் சார்ந்ததாக இருக்கும். ஆனால் சில தனிப்பட்ட மோதல்களாக மாறிவிடும். கம்பீருக்கும் எனக்கும் நடந்த மோதலைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் காட்டும் ஆட்டிடியூட் அளவுக்கு ரெக்கார்டு இல்லாதவர். டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரைப் போன்று நடந்துகொள்வார். எங்கள் ஊரில் இவர் போன்றவர்களை சரியல் (சிடுமூஞ்சிக்காரன்) என அழைப்போம். மேலும் அன்றைய எங்களில் மோதலில் நாங்கள் இருவரும் மாறி மாறி மற்றவர் வீட்டுப் பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம்’ எனக் கூறியிருந்தார்.

அஃப்ரிடியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள கம்பீர்  டிவிட்டரில் ‘நாங்கள் இன்னும் பாகிஸ்தான் காரர்களுகு மருத்துவ சுற்றுலாவுக்காக இன்னமும் நாங்கள் விசா கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் இந்தியா வந்தால் உங்களை நானேத் தனிப்பட்ட முறையில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments