Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி சமநிலையில் இல்லை –கௌதம் கம்பீர் கருத்து!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (16:41 IST)
இந்திய அணி சமநிலை இல்லாமல் இருப்பதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்திய அணி வீரர்களின் பவுலிங் மிக மோசமாக இருந்ததால் 374 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் விரைவாக அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணியில் இடம்பெற்ற ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ‘இந்திய அணி சமநிலையில் இல்லை. முதலில் களமிறங்கும் 6 வீரர்களில் ஒருவர் கூட இரண்டு ஓவர்கள் வீச முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான விஜய் சங்கரால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை. அவர் வந்தாலும், ரோஹித் வந்தாலும் அணியை சமநிலைக்கு கொண்டு வர முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments