Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிரான்ஸ்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (17:44 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். அந்த வகையில் முதல் போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி சற்றுமுன் முடிவடைந்தது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது
 
ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிய நிலையில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடாததால் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் முறையில் ஆடியதால் 2-வது பாதியின் 58-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கிரீஷ்மான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெற செய்தார். ஆனால் இதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியா அணி 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் மீண்டும் இரு அணிகளும் 1-1 என சமநிலை அடைந்தன.
 
இதன் பின்னர் சுதாரித்து ஆடிய பிரான்ஸ் அணி 81-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை சமன்படுத்த ஆஸ்திரேலியா கடுமையாக முயன்றும் முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments