இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம்..!

Mahendran
திங்கள், 29 ஜூலை 2024 (13:18 IST)
இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை தீவு திடலில் ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் கார் ரேஸ் பந்தயத்தை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு நாட்களில் பார்முலா 4 கார் ரேஸ் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சென்னை தீவுத்திடல் மைதானத்தில் சுற்றியுள்ள 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சாலையில் இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவு திடலில் தொடங்கும் கார் பந்தயம் அண்ணா சாலை, சிவானந்த சாலை,நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்தடலை சென்றடைவது போல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவு நேர போட்டிக்காக ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் நடைபெற இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments