Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (08:03 IST)
ஓய்வு முடிவை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருந்தவர் அசோக் திண்டா. இவர் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திண்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பதும் ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பதும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் திண்டா, தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு பெற்றுள்ளதால் மேற்குவங்க மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

கடைசி போட்டியில் தோல்வி.. கண்ணீருடன் ஓய்வு பெறுகிறார் ரஃபேல் நடால்..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!

தென்னிந்திய அளவிலான ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்! - 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments