Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடுவாரா தோனி? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (18:40 IST)
ஐபிஎல் 20-20 போட்டிகளுக்கான அணிகள், வீரர்கள் தேர்வு ஆகியவை தொடங்கவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கிரிக்கெட்டை தவிர்த்து வருகிறார். இராணுவத்திற்கு சென்று சிறிது காலம் பயிற்சி எடுத்தவர், தற்போது குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்து வருகிறார்.

சமீபத்தில்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐ முன்னாள் தலைவரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான சீனிவாசன் சிஎஸ்கே அணி குறித்து பேசினார். அப்போது அவர் ”சிஎஸ்கே அணி இரண்டு வருடங்களுக்கு தடை செய்யப்பட்ட போது பொறுமையாக காத்திருந்தோம். 2018ல் மீண்டும் களம் இறங்கியபோது சிஎஸ்கேவும், தோனியும் வெற்றிக்காக வெறித்தனமாக காத்திருந்தார்கள். அவர்களால்தான் அந்த வெற்றி சாத்தியமானது” என்று பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு எப்படியோ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தோனிதான் பலருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் அதில் மீண்டும் சிஎஸ்கே சார்பில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்களும் ஆவலாக காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments