Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ரன்கள், 100 விக்கெட் – ஜாம்பவான்களால் முடியாத சாதனையை நிகழ்த்திய வீராங்கனை !

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (14:39 IST)
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் எந்தவொரு வீரரும் நிகழ்த்தாத சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்ஸி பெரி படைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை எந்தவொரு சர்வதேச வீரரும் செய்யாத ஒரு சாதனையான 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் என்ற சாதனையை ஆஸி வீராங்கனை எஸ்லி பெரி நேற்றுப் படைத்துள்ளார். நேற்றி இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆஸி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் சேர்த்த பெரி 1000 ரன்கள் சேர்த்த வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். கடந்த ஆண்டு இவர் டி20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை இந்த சாதனையை எந்த  ஒரு வீரரும் நிகழ்த்தியதில்லை.

பாகிஸ்தானின் வீரர் ஷாகித் அப்ரிடி டி20 போட்டியில் 1,416 ரன்களும், 98 விக்கெட்டுகளையும் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன்  88 விக்கெட்டுகளையும், 1471 ரன்களையும் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments