Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதத்தை நெருங்கும் புரூக், சதமடித்த ஜோ ரூட்.. இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் ஸ்கோர்..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:29 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையே தற்போது இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அந்த அணி 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால் அதன் பின் ஜோ ரூட் மட்டும் ஹாரி புரூக் ஆகிய இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சார்களை பதம் பார்த்தனர். ஜோ ரூட் 101 ரன்கள் அடித்துள்ளார் என்பதும், புரூக் 184 ரன்கள் அடித்து தொடர்ந்து களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்னும் சில நிமிடங்களில் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அதேபோல் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments