Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க ஆட்டக்காரர்களை காலி செய்தும் இங்கிலாந்து அணி 233 ரன்கள் முன்னிலை

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (12:33 IST)
4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சரிவை சமாளித்து 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் தற்பொது 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. புஜாரா சதம் விளாசி இந்திய அணியை முன்னிலை பெற செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களில் ஆலவுட் ஆகி இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. 
 
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக வீழ்த்தினர் இந்திய பந்துவீச்சாளர்கள், குக் 12 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 36 ரன்னிலும், மொயின் அலி 9 ரன்னிலும், ஜோ ரூட் 48 ரன்னிலும், பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
பின் களமிறங்கிய பட்லர் பொறுமையாக விளையாடி 69 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து, தற்போது 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments