முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்: இன்றே முடிந்துவிடுமா டெஸ்ட் போட்டி?

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:52 IST)
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்: இன்றே முடிந்துவிடுமா டெஸ்ட் போட்டி?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவும் தனது முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து 33 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி சற்று முன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய போது முதல் ஓவரை வீசிய அக்சர் படேல் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி பரிதாபமாக இழந்தது. முதல் மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து சிப்லே மற்றும் பெயர்ஸ்டோ விக்கெட்டுகள் விழுந்தால் இங்கிலாந்து அணி தற்போது நிதானமாக விளையாடி வருகிறது
 
சற்றுமுன் வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கை பார்த்தால் இந்த போட்டி இன்றே முடிவடைந்துவிடும் என்று தெரிவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments