Webdunia - Bharat's app for daily news and videos

Install App

159 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து: பாகிஸ்தான் அபார பந்துவீச்சு

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:45 IST)
159 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. ஷான் மசூத் 156 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்ததை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து நேற்றைய 2ஆம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்திருந்தது
 
இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் அவுட் இன்றி இருந்த போப் தொடர்ந்து விளையாடினார். அவர் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் அந்த அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வோக்ஸ் 15 ரன்களுடனும், பட்லர் 38 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments