Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் இங்கிலாந்து, திணறும் பாகிஸ்தான்

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (06:44 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 96 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது. இந்த அணி பாகிஸ்தான் அணியை விட 128 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இங்கிலாந்து அணியின் பெஸ் 49 ரன்களும், குக் 46 ரன்களும், ரூட் 45 ரன்களும் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் அமீர், அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், அப்பாஸ், ஹசன் அலி, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதியுள்ள நிலையில் இந்த போட்டி இங்கிலாந்துக்கு சாதகமாக செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பவுன்சர் வந்தால் அதை விட்டுவிடு… இளம் வீரருக்குக் கம்பீர் சொன்ன அட்வைஸ்!

ரோஹித், கோலியை அடுத்து முக்கிய மைல்கல்லை எட்டிய ரிஷப் பண்ட்!

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

அடுத்த கட்டுரையில்
Show comments