Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான நிலையில் இங்கிலாந்து… விக்கெட் கிடைக்காமல் இந்திய பவுலர்கள் தடுமாற்றம்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:40 IST)
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று படு மோசமாக விளையாடி 78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது தெரிந்ததே. நேற்றைய போட்டியில் இரண்டு பேட்ஸ்மேன்களை தவிர அனைவருமே ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகினர் என்பதும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 120 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை ஷமி வீழ்த்தியுள்ளார். பேர்ன்ஸ் 61 ரன்களில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இருப்பினும் தற்போது இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 62 ரன்கள் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஹமீதை ஜடேஜா 68 ரன்களில் வீழ்த்தினார்.

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 182 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

“RCB நிர்வாகம் என்னிடம் பேசினார்கள்… இப்படிதான் இருக்கணும்” –மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்!

ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!

பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப் போவது யார்?.. ரிக்கி பாண்டிங் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments