Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156க்கு ஆல்-அவுட்.. இங்கிலாந்தின் மோசமான விளையாட்டு தொடர்கிறதா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (17:02 IST)
இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி இந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருவதைப் போல் இன்றும் மோசமாக விளையாடி உள்ளது. 
 
அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டும் 43 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்து அவுட்டாகினர். இலங்கை அணியின்பந்துவீச்சாளர்கள் இன்று அபாரமாக பந்து வீசி விக்கட்டுகளையும் வீழ்த்தினார். 
 
இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  இங்கிலாந்து அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்துள்ளது என்பதும் வங்கதேச அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments