Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பந்து கிரிக்கெட் லீக்: இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு புதிய முயற்சி

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (22:03 IST)
டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி ஆகிய போட்டிகள் அதிக நாள், நேரம் எடுத்து கொள்வதால் பார்வையாளர்களுக்கு போரடித்து விடுகிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டி20 போட்டி தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஒருசில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் இந்த போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் இந்த போட்டியும் சுமார் ஆறு மணி நேரம் நடப்பதால் தற்போதைய அவசர உலகில் ஒரு விளையாட்டிற்காக ஆறுமணி நேரம் செலவு செய்ய மக்கள் தயாராக இல்லை. போட்டியின் இறுதியில் மட்டுமோ அல்லது ரீப்ளே பார்த்தோ மக்கள் திருப்தி அடைந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த  100 பந்து கிரிக்கெட் லீக் என்ற தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது

இந்த போட்டியில் விளையாட  கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்பட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், வரும்  20-ந்தேதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வீரர்கள் அடங்கிய முழுப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments