Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இன்னிங்க்ஸில் ஆதிக்கம் செலுத்திய விண்டீஸ் – 114 ரன்கள் முன்னிலை!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (11:47 IST)
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக சர்வதேசப் போட்டிகள் நடக்காத நிலையில் ஜூலை 8 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் சேர்தத்து இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெய்ட்(65) மற்றும் விக்கெட் கீப்பர்(61) அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 318 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்களும், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 15 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments