Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் களமிறங்கும் நோவாக் ஜோகோவிக்..

Arun Prasath
திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:14 IST)
செர்பிய டென்னிஸ் வீரர் நோவோக் ஜோகோவிக், இன்று நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார்.

செர்பியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் உலகின் நம்பர் 1 பிளேயர் ஆவார். தற்போது துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளார் ஜோகோவிக். இது குறித்து அவர் பேசுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த போட்டிகளை மிகச்சிறப்பாக தொடங்குவேன். நான் எனது குடும்பத்துடன் துபாய் வந்துள்ளேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் விளையாட உள்ளதால், கடந்தகாலத்தில் சிறப்பாக விளையாடியதை மறுபடியும் கொண்டுவருவதை நோக்கியுள்ளேன்” என கூறியுள்ளார்.

துனிசியாவைச் சேர்ந்த மேலேக் ஜஸ்ரியுடன் மோதவுள்ள நிலையில், “அவர் எனக்கு சிறந்த நண்பர், இந்த டூரில் அவர் என்னுடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக தெரியும். 4 அல்லது 5 வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இதே துபாயில் விளையாடியிருக்கிறோம்” என கூறுகிறார். ஜோகோவிக் மாரின் சிலிக்குடன் டபுள்ஸிலும் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments