Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

vinoth
சனி, 25 ஜனவரி 2025 (15:10 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்தது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கினர்.கடந்த சில தொடர்களில் ஷுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் விரைவில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில்  ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதன் மூலம் அவரின் இந்திய அணிக் கேப்டன் கனவு பலிக்காதோ என்ற சூழல்தான் நிலவுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஏன் கேப்டன் பதவியில் ஒதுக்கப்படுகிறார் என்பது தனக்கு ஆச்சர்யமளிப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதில் “அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. அவர் துணைக் கேப்டனாக இருந்த இருதரப்பு தொடரிலும் இந்தியா வென்றது. ஆனால் பாண்ட்யா நீக்கப்பட்டுள்ளார். அது ஏன் என்பதற்கானக் காரணம் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments