Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனில் நரேன், உத்தப்பாவைத் திட்டித்தீர்த்த தினேஷ் கார்த்திக் !

Webdunia
சனி, 4 மே 2019 (12:04 IST)
கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தி நேற்றைய பஞ்சாப் அணியுடனானப் போட்டியின் போது மிகவும் கோபமாக நடந்துகொண்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 12 ஆவது சீசனின் 52 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் குவாலிஃபயர் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்தப் போட்டியில் கே கே ஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தி மிகவும்  கோபமாக களத்தில் நடந்துகொண்டார்.

பந்துவீச்சின் போது முதல் பவர்பிளேயின் போது பவுலரை மாற்றியது தொடர்பாக சுனில் நரேன் , உத்தப்பா மற்றும் கார்த்தி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கார்த்தி மற்ற இருவரையும் கடுமையாக திட்டி அனுப்பினார். அதன் பின்னரும் களத்தில் மிகவும் கோபமாகவேக் காணப்பட்டார்.

போட்டிக்குப் பின்னர் இதுகுறித்துப் பேசிய கார்த்தி ‘நல்ல விதமான முடிவு கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதையும் நான் செய்ய தயார்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே ஆந்த்ரே ரஸல் அணி நிர்வாகம் குறித்து குற்றம் சுமத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments